அமெரிக்காவில் புளோரிடா கடற்கரையில், ஒரு கரடிக் குட்டி, ஆனந்த குளியலிட்டதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர்.
புளோரிடாவில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை மக்கள் பலர் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் கரடிக் குட்டி ஒன்று, தண்ணீரில் நீந்தி வந்ததை மக்கள் கண்டனர்.
மக்களை கண்டதும் அச்சமடைந்த கரடி, நீரில் இருந்து வெளியேறி மணல் திட்டுகளை நோக்கி ஓட்டம் பிடித்து அங்குள்ள புதரில் சென்று மறைந்தது.
அப்பகுதியில் நிறைய கரடிகள் இருப்பதாகவும், அவ்வப்போது கரடிகள் இது போன்று நீரில் நீந்தி வெப்பத்தின் தாக்கத்தை தணித்துக் கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.