திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் ஆலயத்திற்கு அருகில் புறம்போக்கு நிலத்தில் உள்ள கடை தொடர்பாக உரிமையாளருக்கும் வாடகைதாரருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வாடகைதாரர் தரப்பைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி மீது தாக்குதல் நடத்தியதாக கூறி ராணுவ வீரர் பிரபாகரன் ஜம்முவில் இருந்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு-வுக்கு வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வெளியான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. […]