கான்பெரா-ஆஸ்திரேலியாவில், திருமணத்தில் பங்கேற்று வீடு திரும்பிய நபர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், 10 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணி அளவில், சிங்கிள்டன் என்ற நகருக்கு பஸ்சில் புறப்பட்டனர். ஹன்டர் பள்ளத்தாக்கு பகுதியில், கிரேட்டா நகருக்கு பஸ் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது.
இதில், பஸ்சில் இருந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், 25 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமான பனிமூட்டத்தால், சாலை தெரியாமல் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் ஹன்டர் வேலி பகுதியில் நடந்த விபத்தில் கவிழ்ந்து கிடக்கும் பஸ்சை ஆய்வு செய்த போலீசார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement