மும்பை: தி கேரளா ஸ்டோரி பட நடிகை அதா சர்மா 30 கோடி ரூபாய் கேட்டு அந்த படத்தின் தயாரிப்பாளரை மிரட்டியதாக பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து ட்வீட் போட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.
இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்துக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆனால், வட இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், 200 கோடிக்கும் அதிகமான வசூலை இந்த படம் ஈட்டியது.
எதிர்ப்பை மீறி 200 கோடி வசூல்: தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்து கவர்ச்சியில் கலக்கிய நடிகை அதா சர்மா தான் தி கேரளா ஸ்டோரி படத்தின் ஹீரோயின்.
எந்தவொரு டாப் ஹீரோயினின் உமன் சென்ட்ரிக் படமும் 200 கோடி பாக்ஸ் ஆபிஸை வசூல் செய்யவில்லை என்றும் தான் நடித்த தி கேரளா ஸ்டோரி படம் தான் முதன் முதலில் இந்தியாவிலேயே அந்த சாதனையை படைத்தது என பெருமையாக பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
கவர்ச்சி டு சர்ச்சை: கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த அதா சர்மாவுக்கு சினிமா வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. செகண்ட் ஹீரோயினாகவும் சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து வந்தார்.
இந்நிலையில், அதா சர்மாவின் ரூமர் காதலரும் தயாரிப்பாளருமான விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி படத்தில் அதா சர்மா லீடு ரோலில் நடித்து இருந்தார். அந்த படம் சர்ச்சைகளை கடந்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தியதற்கு தான் தான் காரணம் என அதா சர்மா கூறி வருவதாக பாலிவுட் விமர்சகரான உமைர் சந்து பதிவிட்டு இன்னொரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
30 கோடி கேட்டு மிரட்டினாரா: பாலிவுட் பிரபலங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி வரும் உமைர் சந்து தற்போது, நடிகை அதா சர்மா ரொம்பவே ஆட்டம் போட்டு வருகிறார். தி கேரளா ஸ்டோரி பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், தயாரிப்பாளரிடம் 30 கோடி ரூபாயை தனக்கு சம்பளமாக கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளதாக குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதா சர்மாவுக்காக அந்த படம் ஓடவில்லை என்றும் படத்தின் பிரச்சார தொனி கதைக்காகத் தான் அந்த படத்திற்கு அப்படியொரு வசூல் வந்தது என்றும் அதா சர்மாவுக்கு அத்தனை கோடி கொடுக்க தேவையில்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.