இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஆனந்தம் படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த லிங்குசாமி அடுத்ததாக மாதவனை வைத்து ரன் எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார். தொடர்ந்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி மூன்றாவதாக அஜித் குமாரை வைத்து ஜி படத்தை எடுத்தார்.
சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
அஜித் குமார் கல்லூரி மாணவராக நடித்த ஜி படம் தோல்வி அடைந்தது. அஜித், த்ரிஷா நடிப்பில் வெளியான ஜி படம் கல்லா கட்டவில்லை.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் ஜி படம் குறித்து மனம்திறந்து பேசியிருக்கிறார் லிங்குசாமி. அவர் கூறியிருப்பதாவது,
என்னுடைய ஜி படத்தில் அஜித் குமார் கல்லூரி மாணவராக நடிக்கக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் காலத்தின் கட்டயாத்தால் அந்த படத்தை இயக்கினேன்.
சித்தார்த்தை தான் ஹீரோவாக நடிக்க வைக்க நினைத்தேன். அந்த படக் கதையில் அஜித்தை நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவே இல்லை. சித்தார்த் போன்ற நடிகர் நடிக்க வேண்டிய படம் தான் ஜி. இதை தான் அஜித்தும் நினைத்தார்.
Prabhudeva: உண்மையே, இந்த வயதில் நான் மீண்டும் அப்பாவாகியிருக்கிறேன்: பிரபுதேவா
படப்பிடிப்பு துவங்குவதற்கு முந்தைய நாள் தான் கதையை கேட்டார் அஜித். நானும் முழுக் கதையையும் சொன்னேன்.
பொறுமையாக கேட்ட அவர், இந்த படம் ஓடாது சார். வேறு கதை இருந்தால் சொல்லுங்கள் என்றார். ஆனால் என்னுடன் இருந்தவர்களோ, அஜித் அப்படித் தான் பேசுவார். அவர் பேச்சை கேட்க வேண்டாம். படத்தை இயக்குங்கள் என்றார்கள். நானும் படத்தை இயக்கினேன். கடைசியில் அஜித் சொன்னது மாதிரியே படம் ஓடவில்லை என்றார்.
ஜி படக் கதை தனக்கு சரிபட்டு வராது, அதை மீறி நடித்தால் படம் ஓடாது என்பதை இயக்குநரிடம் வெளிப்படையாக கூறிவிட்டார் அஜித். அதையும் தாண்டி அந்த படத்தை இயக்க லிங்குசாமி முடிவு செய்ததும் நடித்திருக்கிறார்.
லிங்குசாமி சொன்னதை கேட்ட அஜித் ரசிகர்களோ, ஆமாம் அந்த படம் ஏ.கே.வுக்கு செட்டாகல என தெரிவித்துள்ளனர்.
அஜித் குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் துவங்கவிருக்கிறது. படத்திற்காக பிரமாண்ட செட் போடும் பணி நடந்து வருகிறது. முதலில் சண்டை காட்சியை படமாக்கவிருக்கிறாராம் மகிழ்திருமேனி.
படத்திற்காக தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கிறார் அஜித். விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அர்ஜுன் தாஸ் முக்கிய வில்லன் இல்லை என்று கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜை போன்று மகிழ்திருமேனியின் படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் வெயிட்டானதாக இருக்கும். அஜித்துக்கு கெத்து காட்டும் அளவுக்கு ஒரு பிரபல நடிகரை தான் முக்கிய வில்லனாக நடிக்க வைக்கப் போகிறார்களாம்.
டான்ஸ் நடிகையை ரூ. 21 லட்சம் பைக்கில் ஊர் சுற்ற வைத்த அஜித்
விடாமுயற்சி படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. படத்தை அடுத்த ஆண்டு கோடையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். விடாமுயற்சி பட வேலையை முடித்துக் கொண்டு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலக டூர் கிளம்பப் போகிறார் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.