இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Actor Arya daughter: ஆர்யா, சயீஷா மகள் அரியானாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சயீஷாகஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சயீஷா. அவர்களுக்கு அரியானா என்கிற மகள் இருக்கிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தன் அம்மா ஷாஹீன், கணவர் ஆர்யா, மகளுடன் வெளியே சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் சயீஷா. அந்த புகைப்படத்திற்கு லைக்ஸுகள் வந்து குவிந்துவிட்டது.சித்தார்த்சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்க்யூட் பேபிஜூலை மாதம் வந்தால் அரியானாவுக்கு இரண்டு வயதாகப் போகிறது. ஆனால் அவரை பார்த்தால் பெரிய பிள்ளையாக தெரிகிறார். அப்பாவை விட உயரமாக வருவார் போன்று. ஆர்யா, சயீஷா இருவர் ஜாடையிலும் இருக்கிறார் அரியானா. பெண் பிள்ளைகள் தான் எவ்வளவு வேகமாக வளர்கிறார்கள். அரியானா ரொம்ப க்யூட்டாக இருக்கிறார். கண்ணு படப் போகுது. சுத்திப் போடுங்கள் சயீஷா என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மகள்View this post on InstagramA post shared by Sayyeshaa (@sayyeshaa)ராவடிதிருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார் சயீஷா. கர்ப்பம், குழந்தை என்றான பிறகு நடிப்பில் இருந்து பிரேக் எடுத்தார். மீண்டும் எப்பொழுது நடிக்க வருவீர்கள் என ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில் தான் சிம்புவின் பத்து தல படத்தில் ராவடி பாடலுக்கு குத்தாட்டம் போட்டு கம்பேக் கொடுத்தார். சயீஷா இப்படி குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுவார் என எதிர்பார்க்கவில்லை என்றார்கள் ரசிகர்கள்.
நல்ல டான்ஸர்Leo:விஜய்யின் லியோ கதை எல்.சி.யூ.வே தான்: செட்டில் இருந்து வெளியான போட்டோஹீரோயின்கள் குத்துப்பாட்டுக்கு ஆடுவது வழக்கமாகிவிட்டது. புஷ்பா படத்தில் வந்த ஊ சொல்றியா மாமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சமந்தா. இதையடுத்து ராவடி பாடலுக்கு ஆடினார் சயீஷா. அவரின் பெயரை சொன்னாலே டான்ஸ் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அற்புதமாக ஆடுவார். ராவடி பாடலுக்கு அவர் ஆடியதை பார்த்து ரசிகர்கள் அசந்து போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.
படங்கள்சயீஷா நல்ல கதைக்காக காத்திருக்கிறார். கதை கிடைத்தால் மீண்டும் நடிக்க வந்துவிடுவாராம். குழந்தை பிறந்துவிட்டது அதனால் வீட்டோடு தான் இருக்க வேண்டும் என கட்டுப்படுத்தும் கணவர் இல்லை ஆர்யா. மாறாக மனைவியின் கெரியருக்கு ஆதரவாக இருக்கும் கணவர். இந்நிலையில் ஆர்யாவும், சயீஷாவும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்யா, சயீஷாகஜினிகாந்த் படத்தை அடுத்து காப்பான், டெடி ஆகிய பாடங்களில் சேர்ந்து நடித்தார்கள் ஆர்யாவும், சயீஷாவும். அதில் டெடி படம் குட்டீஸ்களை பெரிதும் கவர்ந்தது. சயீஷா நடிப்பில் கடைசியாக வெளியான படம் யுவரத்னா. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்த யுவரத்னா மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார் சயீஷா.
நயன்தாராNayanthara: நயன்தாரா பற்றி யாரும் சொல்லாத ரகசியம் சொன்ன ஆர்யாஆர்யா நடிப்பில் அண்மையில் வெளியான படம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம். அந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அந்த படத்தை விளம்பரம் செய்தபோது நயன்தாராவுடன் சேர்ந்து லாங் டிரைவ் போக வேண்டும் என்றார் ஆர்யா. ஆனால் நயன்தாராவுடன் டிரைவ் சென்றால் நாம் தான் கார் ஓட்ட வேண்டும். அவருக்கு கார் ஓட்டத் தெரியாது என்று தெரிவித்தார்.