Dhanush 50 -த்ரிஷாவும் நோ..கங்கனாவும் நோ.. தனுஷ் 50 ஹீரோயின் யார் தெரியுமா?

சென்னை: Dhanush 50 (தனுஷ் 50) தனுஷ் இயக்கி நடிக்கும் அவரது 50ஆவது படத்தின் ஹீரோயின் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் கடைசியாக வாத்தி படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை நிலைநிறுத்தலாம் என்ற தனுஷின் ஆசை நிராசை ஆனது. அந்தப் படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார்.

கேப்டன் மில்லர்: தியாகராஜா குமாரராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் அருண் மாதேஸ்வரன். அவரது இயக்கத்தில் கேப்டன் மில்லர் உருவாகிவருவதால் நிச்சயம் இந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி கவனம் ஈர்க்கும் என்று தனுஷும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். படத்தின் ஷூட்டிங் இப்போது மதுரையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

சிக்கல்: இதற்கிடையே படத்தில் போர்க்காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதனையொட்டி தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. அப்போது குண்டுவெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால் அதற்கு உரிய அனுமதி பெறாததால் ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்படி தொடர்ந்து படத்தின் ஷூட்டிங்கிற்கு சிக்கல் வந்தாலும் அவை எல்லாம் தற்போது தீர்க்கப்பட்டு சுமூகமாக ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கிறது.

தனுஷ் 50: இந்தச் சூழலில் சமீபத்தில் தனுஷின் 50ஆவது படம் குறித்த அப்டேட் தெரியவந்தது. அதன்படி படத்தை அவரே இயக்கவிருக்கிறார். வடசென்னையை மையமாக வைத்து உருவாகவிருக்கும் அப்படத்துக்கு ராயன் என பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. படத்தை பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஏற்கனவே ராஜ்கிரணை வைத்து தனுஷ் இயக்கிய பவர்பாண்டி படம் பலத்த வரவேற்பைப் பெற்றதால் நிச்சயம் இந்தப் படமும் அருமையாக இருக்கும் என அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர்.

படத்தில் யார் யார்: தனுஷ் படத்தை இயக்குவதால் நிச்சயம் அந்தப் படத்துக்கு ஸ்டார் வேல்யூ கூடும் என்றே கருதப்படுகிறது. அதன்படி படத்தில் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.அவரைத் தவிர்த்து விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று தெரிகிறது. மேலும், சந்தீப் கிஷன் தனுஷுக்கு சகோதரராக நடிக்கிறார் என்ற பேச்சு ஒன்று உலாவுகிறது.

ஹீரோயின் யார்: இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதனையடுத்து கங்கனாவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அதற்கு அவர் நோ சொல்லிவிட்டார் என்று பேசப்பட்டது. ஆனால் தனுஷுக்கு நான் நோ சொல்லமாட்டேன் என கங்கனா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படத்தின் ஹீரோயின் தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது வென்ற அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் என்ற புதிய பேச்சு எழுந்திருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.