இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
மீண்டும் இயக்குனராக தனுஷ்ராஜ்கிரணை வைத்து பா.பாண்டி என்ற படத்தை இயக்கி வெற்றிகண்டார் தனுஷ். அதன் பிறகு ஸ்ரீகாந்த், எஸ்.ஜெ சூர்யா ஆகியோரின் நடிப்பில் தன் இரண்டாவது படத்தை இயக்கினார் தனுஷ். ஆனால் அப்படம் சில காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் D50 படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கின்றார் தனுஷ். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் தற்போது படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தில் தனுஷே நாயகனாக நடிக்க இருக்கின்றார்
கதைக்களம்தனுஷ் நடித்து இயக்க இருக்கும் D50 திரைப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கின்றதாம். புதுப்பேட்டை மற்றும் வடசென்னை படங்களை போல இப்படமும் ஒரு சிறந்த கேங்ஸ்டர் படமாக இருக்குமாம். மேலும் ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் ரிவெஞ் டிராமா தான் இந்த D50 என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷின் அண்ணனாக இப்படத்தில் எஸ்.ஜெ சூர்யா நடிப்பதாகவும், தம்பியாக சந்தீப் கிஷன் நடிப்பதாகவும் தெரிகின்றது. மேலும் விஷ்ணு விஷாலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றார். தனுஷின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக D50 இருக்கும் என தெரிகின்றது.
D50 பற்றி எஸ்.ஜெ சூர்யாசமீபத்தில் ஒரு பேட்டியில் தனுஷுடன் இணைந்து D50 படத்தில் நடிப்பதாக எஸ்.ஜெ சூர்யா கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே தனுஷ் இயக்கத்தில் உருவான இரண்டாவது படத்தில் தான் நடித்ததாகவும், அதில் தனுஷின் இயக்கத்தை பார்த்து தான் வியந்ததாகவும் கூறியுள்ளார் எஸ்.ஜெ சூர்யா. மேலும் அப்படம் மீண்டும் கண்டிப்பாக துவங்கும் எனவும் கூறியிருந்தார் எஸ்.ஜெ சூர்யா. இந்நிலையில் D50 படத்தில் தனுஷிற்கு அண்ணனாக எஸ்.ஜெ சூர்யா நடிப்பதாகவும், வில்லனாகவும் படத்தில் மிரட்ட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. சமீபகாலமாக எஸ்.ஜெ சூர்யா வில்லனாக நடிக்கும் படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்று வருவதால் இப்படமும் பிரமாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது
லேட்டஸ்ட் அப்டேட்இந்நிலையில் தற்போது பிரபல நடிகை அபர்ணா பாலமுரளி இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக இவர் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து தனுஷிற்கு ஜோடியாக இப்படத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக கடந்த சில தினங்களாக ஒரு தகவல் சுற்றி வருகின்றது. மேலும் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ தயாராகிவிட்டதாகவும், ஜூலை மாதம் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாக இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு இறுதியில் இபபடத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து 90 நாட்கள் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றது குறிப்பிடத்தக்கது