Leo:விஜய்யின் லியோ கதை எல்.சி.யூ.வே தான்: செட்டில் இருந்து வெளியான போட்டோ

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் லியோ. படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சினிமாவில் 20 வருடங்களை நிறைவு செய்கிறேன்
லியோ படத்தின் கதை எல்.சி.யூ.வா என லோகேஷ் கனகராஜிடம் கேட்டதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில் லியோவின் கதை எல்.சி.யூ.வே தான் என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள். அதற்கு காரணம் ஒரு புகைப்படம்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூவில் வரும் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்த வசந்தியும், மாயா கிருஷ்ணனும் லியோவில் நடித்து வருகிறார்கள்.

லியோ படப்பிடிப்பு தளத்தில் வசந்தியும், மாயா கிருஷ்ணனும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்களோ இது கண்டிப்பாக எல்.சி.யூ. கதை தான். இல்லை என்றால் ஏஜெண்ட் டீனாவும், மாயாவும் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். கதையை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். ஆனால் நாங்கள் கண்டுபிடித்துவிட்டோமே என்கிறார்கள் ரசிகர்கள்.

விஜய்யை தனது எல்.சி.யூ.வுக்குள் கொண்டு வருவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் லோகேஷ் கனராஜ். இந்நிலையில் இப்படி ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக லியோ படக்குழு காஷ்மீருக்கு கிளம்பிச் சென்றது. அப்பொழுது விமான நிலையத்தில் படக்குழுவுடன் ஏஜெண்ட் டீனாவை பார்த்த உடனே இது எல்.சி.யூ.வாக இருக்குமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் மாயாவையும் பார்த்த பிறகு இது எல்.சி.யூ.வே தான் என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

லியோ படத்தில் வித்தியாசமான ஒன்றை செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இது அவர் கேரக்டரே இல்லை என அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது லியோ படத்தில் விஜய்யின் அறிமுக பாடலை மிகவும் பிரமாண்டமாக ஷூட் செய்திருக்கிறார்.

அதில் விஜய்யுடன் சேர்ந்து 2 ஆயிரம் பேர் ஆடியிருக்கிறார்களாம். தியேட்டரில் அந்த பாடல் வரும்போது ரசிகர்கள் யாரும் இருக்கையில் இருக்க மாட்டார்கள். எழுந்து டான்ஸ் ஆடுவார்கள் என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படி பிரமாண்ட ஓபனிங் சாங்லாம் வைக்கும் ஆள் இல்லையே லோகேஷ் கனகராஜ். அப்படி இருக்கும்போது லியோவில் மட்டும் எப்படி. வழக்கமாக ஹீரோயினை போட்டுத்தள்ளுவதற்கு தான் பெயர் போனவர். அந்த மனிதர் இப்படி மாறிவிட்டாரா என்றே ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

லியோ படப்பிடிப்பு என்னவோ இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. ஆனால் இன்னும் புதிதாக நடிகர்கள், நடிகைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறார் லோகேஷ். லேட்டஸ்டாக சேர்ந்திருப்பவர் மடோனா செபாஸ்டியன்.

Leo: விஜய்யின் லியோவில் பிரேமம் பட நடிகை: லைட்டா பயத்தில் தளபதி ரசிகர்கள்

அவருக்கு முன்பு சேர்ந்தவர் பாலிவுட் நடிகர் டென்சல் ஸ்மித். இத்தனை பேர் நடித்தால் விஜய்யின் ஸ்க்ரீன் டைம் பாதிக்காதா என தளபதி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

லியோவில் விஜய்யை எதிர்க்கவே பாலிவுட்டில் இருந்து சஞ்சய் தத்தை அழைத்து வந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் சஞ்சய் தத் விஜய்யின் அப்பாவாக நடிக்கிறார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் தத்தும், விஜய்யும் கேங்ஸ்டர்கள் என்று கூறப்படுகிறது. இது கேங்ஸ்டர் குடும்ப டிராமா என பேச்சு கிளம்பியிருக்கிறது. ஆனால் இது எதையும் லோகேஷ் உறுதி செய்யவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.