இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இறுதிக்கட்டத்தில் லியோதற்போது லியோ படத்தில் இடம்பெறும் மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. விஜய் பாடியுள்ள இப்பாடலில் கிட்டத்தட்ட 2000 நடன கலைஞர்கள் ஆடியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இப்பாடலை கடந்த சில நாட்களாக படமாக்கிய படக்குழு அடுத்ததாக கிளைமாக்ஸ் சண்டை காட்சியை படமாக்க இருக்கின்றதாம். அத்துடன் லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருப்பதாக தெரிகின்றது. கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்ட லியோ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இன்னும் சில தினங்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைய இருக்கின்றது
லோகேஷின் ஆசைபெரும்பாலும் லோகேஷ் தன் படங்களில் பாடல்களில் அதிக கவனம் செலுத்தமாட்டார். ஆனால் தற்போது லியோ படத்தில் பாடல்களுக்கும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார். தற்போது மிகப்பிரமாண்டமான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டதை அடுத்து இப்பாடலை விஜய் பாடினால் நன்றாக இருக்கும் என லோகேஷ் தன் ஆசையை கூறியுள்ளார். முதலில் இப்பாடலை அனிருத் மற்றும் அசல் கோலார் தான் பாடியிருந்தார். ஆனால் லோகேஷின் விருப்பத்திற்காக தற்போது இப்பாடலை அனிருத் விஜய்யை பாடவைத்துள்ளார். அந்த அளவிற்கு லியோ படத்தில் இடம்பெறும் பாடல்களில் கவனம் செலுத்தி வருகின்றார் லோகேஷ்
எதிர்பார்ப்பில் ரசிகர்கள்இன்னும் சில தினங்களில் விஜய்யின் பிறந்தநாள் வரவிருக்கும் நிலையில் தளபதி ரசிகர்கள் அனைவரும் லியோ படத்திலிருந்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கும் தளபதி 68 படத்தின் அறிவிப்பும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சிலர் நம்பியிருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக லியோ படத்திலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ அல்லது படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாள் விருந்தாக ரசிகர்களுக்கு கிடைக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
விஜய் போட்ட உத்தரவுவிஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் கிலிம்ப்ஸ் வீடீயோவை வெளியிட லோகேஷ் முடிவெடுத்துள்ளார். அதற்கான வேலைகளையும் விரைவில் துவங்கலாம் என்று எண்ணியிருத்த லோகேஷிற்கு விஜய் ஒரு உத்தரவை போட்டுள்ளார். அதாவது லியோ படத்தின் கிலிம்ஸ் அல்லது டீசர் ஆகியவற்றை தற்போது வெளியிட வேண்டாம் என்றும், அவ்வாறு வெளியிட்டால் படத்தின் சஸ்பென்ஸ் குறைந்துவிடும் எனவும் விஜய் லோகேஷிற்கு உத்தரவு போட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனவே விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கிலிம்ஸ் வீடியோ வெளியாகாது என்றே தெரிகின்றது. இருந்தாலும் லியோ படத்தின் போஸ்டராவது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் விஜய்யின் இந்த உத்தரவை கேள்விப்பட்ட ரசிகர்கள் சற்று ஏமாற்றத்தில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது