இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் கடந்த ஆறு மாதங்களாக பிசியாக லியோ படப்பிடிப்பில் நடித்து வருகின்றார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இப்படம் வெளியாகும் முன்பே தயாரிப்பாளருக்கு பலகோடி லாபத்தை தந்துள்ள நிலையில் லியோ படம் வெளியான பிறகு ஆயிரம் கோடி வசூல் சாதனையை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவேண்டும் என நினைக்கின்றார் விஜய். ஏனென்றால் அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு திரைப்படம் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
லியோ படப்பிடிப்பு
எனவே லியோ படத்தை விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற செய்ய உழைத்து வருகின்றார் விஜய். கண்டிப்பாக இப்படம் விமர்சனத்திலும் அனைவரது பாராட்டை பெரும் என்ற நம்பிக்கை விஜய் உட்பட படக்குழு அனைவர்க்கும் இருந்து வருகின்றது.
Vijay: தந்தையின் கஷ்டத்தை உணர்ந்து செயல்படும் விஜய்..மனம்விட்டு பேசிய தளபதி..!
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் தான் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று மிகப்பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. 2000 நடனக்கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட அப்பாடலை விஜய் பாடியுள்ளார் எனவும் தகவல்கள் வருகின்றன.
கிட்டத்தட்ட ஒருவாரம் இப்பாடலின் படப்பிடிப்பு நடைபெற்றதாம். இதையடுத்து கிளைமாக்ஸ் சண்டை காட்சி மட்டுமே படமாக்கப்பட இருக்கும் நிலையில் விரைவில் இபபடத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரேக் எடுத்த தளபதி
இந்நிலையில் தற்போது விஜய் லியோ படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துள்ளதாக தெரிகின்றது. தன் மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் விஜய் அவசரமாக மீட்டிங் நடத்த இருப்பதால் லியோ படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாட்கள் பிரேக் எடுப்பதாக பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இதில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
இந்நிலையில் சமீபகாலமாக விஜய் தன் மக்கள் இயக்கம் சார்பாக பல விஷயங்களை செய்து வருகின்றார். தற்போது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பரிசுகள் வழங்கப்பட இருக்கின்றது. அதற்காகத்தான் விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் இருந்து இரண்டு நாட்கள் பிரேக் எடுத்துள்ளதாக தெரிகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.