Leo: 'லியோ' படம் இப்படித்தான் ரிலீஸ் ஆக போகுதாம்: வெளியான மாஸ் தகவல்.!

என்னதான் ‘தளபதி 68’ படம் குறித்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ‘லியோ’ படம் குறித்த பேச்சுக்கள் சோஷியல் மீடியாவில் அடங்கியிருந்தாலும், ‘லியோ’ படம் ரிலீசாகும் போது அதிரிபுதிரியான ஹிட்டடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தளவிற்கு ஒரு ஸ்ட்ராங்கான டீமுடன் இந்தப்படத்தினை இயக்கி வருகிறார் லோகேஷ். இந்தப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் சோஷியல் மீடியாவில் வட்டமடித்து கொண்டே இருக்கின்றன.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘வாரிசு’ ரிலீசுக்கு முன்பாகவே ‘லியோ’ படத்தில் விஜய் நடிப்பது கன்பார்ம் ஆகியது. இருந்தாலும் படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த படக்குழு, வாரிசு வெளியானதிற்கு பிறகு ‘லியோ’ படம் குறித்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டனர். படம் குறித்த அறிவிப்பு வெளியான கையோடு காஷ்மீருக்கு பறந்தனர் படக்குழுவினர். ஒரு மாதத்திற்கு மேலாக கொட்டும் பணியில் ‘லியோ’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனை தொடர்ந்து தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ‘லியோ’ பட அறிவிப்பு வெளியானதில் இருந்தே இந்தப்படம் பான் இந்தியா படமாகவே வெளியாகும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். திரையுலகை சார்ந்தவர்களும் இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக பேசி வருகின்றனர். இதனால் ‘லியோ’ பான் இந்தியா படமாக வெளியாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதனிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தயாரிப்பாளர் லலித்குமார் ‘லியோ’ பட ரிலீஸ் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ‘லியோ’ படத்தை உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக அமேரிக்கா, வட அமெரிக்காவில் உள்ள திரையரங்குகளை கணக்கெடுத்துள்ளோம்.

Kazan Khan Passes Away: பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம்: சோகத்தில் திரையுலகினர்.!

அதில் மொத்தம் 3000 திரைகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதில் 1500 திரைகளில் லியோவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ‘லியோ’ படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடிக்கின்றனர்.

‘லியோ’ படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அண்மையில் வெளியானது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள ‘தளபதி 68’ படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இந்தப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Ajith: அஜித்தின் இந்த உயரத்திற்கு காரணம்.. மேடையில் கண் கலங்கிய பிரபல இயக்குனர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.