சென்னை: Leo Shooting (லியோ ஷூட்டிங்) விறுவிறுப்பாக நடந்துவந்த லியோ ஷூட்டிங்கிற்கு இரண்டு நாட்கள் பிரேக் விடப்பட்டிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் அவரை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனையடுத்து லியோ படத்தை இயக்கிவருகிறார். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
லியோ: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது
படத்தின் வியாபாரம்: இதற்கிடையே லியோ படத்தின் கதை, பாட்ஷா பட ஃபார்முலாவில்தான் இருக்கும் என தகவல் வெளியானது. ஆனால் இன்னொரு படத்தை பார்த்து எடுப்பவர் லோகேஷ் கனகராஜ் இல்லை என எல்சியூ ரசிகர்கள் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதால் படத்துக்கான ப்ரீ பிஸ்னெஸ்ஸும் பட்டையை கிளப்பிவருவதாக தெரிகிறது. அதன்படி இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் படம் சம்பாதித்திருக்கிறதாம். மேலும் அமெரிக்காவில் மட்டும் 1500 திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதற்கும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.
பட்டையை கிளப்பிய பாடல்: நிலைமை இப்படி இருக்க படத்தின் பாடல் ஷூட்டிங் கடந்த சில நாள்களாக ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்தது. இதில் மொத்தம் 2000 டான்ஸர்கள் பங்கேற்று நடனம் ஆடியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி நடிகை மடோனா செபாஸ்டியனும் இந்தப் பாடலில் நடனம் ஆடியிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே படத்தில் பாலிவுட் பிரபலம் டென்ஸில் ஸ்மித் இணைந்திருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியானது.
ஷூட்டிங்கிற்கு பிரேக்: இந்நிலையில் கடந்த சில நாள்களாக பாடல் ஷூட்டிங் நடந்துவந்த சூழலில் கடந்த 11ஆம் தேதியுடன் அந்த ஷூட்டிங் முடிந்துவிட்டதாம். அந்தப் பாடலில் சஞ்சய் தத் தனது கேங்குடன் வருவதுபோலவும் அப்போது விஜய், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட 2000 பேர் நடனம் ஆடுவதுபோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகிறது. மேலும் நேற்றும், இன்றும் ஷூட்டிங்கிற்கு பிரேக் விடப்பட்டிருக்கிறதாம்.
என்ன காரணம்?: ஷூட்டிங் பிரேக்கிற்கு என்ன காரணம் என விசாரித்தபோது, இன்னும் சில நாள்களில் விஜய் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை சந்திக்கவிருக்கிறார். எனவே அதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த்துடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டதால்தான் இந்த பிரேக் என தெரிகிறது. நாளையிலிருந்து வழக்கம்போல் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.