சென்னை : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருந்த நிலையில், அதில் ஒருவராக மகேஸ்வரி நடித்திருந்தார். சிறிய கேரக்டராக இருந்தாலும் இந்த கேரக்டர் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் தமிழில் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டை மகேஸ்வரி வெளியிட்டுள்ளார்.
விக்ரம் பட நாயகிக்கு கிடைத்த சினிமா சான்ஸ் : நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் மைனா நந்தினி, மகேஸ்வரி, காயத்ரி உள்ளிட்ட நாயகிகளும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று மனைவிகள் இருந்த நிலையில், அதில் நடிகை மகேஸ்வரியும் ஒருவராக நடித்திருந்தார். படத்தில் அவருக்கு சிறிய ரோல்தான் என்றபோதிலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கேரக்டர் அமைந்தது. இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படம் குறித்த அப்டேட்டை அவர் வெளியிட்டுள்ளார்.
சன் டிவியில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான அசத்தப் போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் இவர் ஆங்கராக அறிமுகமான நிலையில், இந்த நிகழ்ச்சி அவருக்கு ஏராளமான சின்னத்திரை மற்றும் சினிமா வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. ரசிகர்களின் பேவரைட் ஆங்கராகவும் இவர் இருந்தார். இந்நிலையில், திடீரென இவர் திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முறிந்த நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் அவருக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக, பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துக் கொண்டு, சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார். இதன்மூலம் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக காதல் கண்டிஷன் அப்ளை என்ற படத்தில் தான் கமிட்டாகியுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். க்யூட்டான புகைப்படத்தையும் இணைத்துள்ளார்
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் மகேஸ்வரி, அடுத்தடுத்த ட்ரெடிஷனல் மற்றும் மாடர்ன் லுக்கில் போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். பிகினியில் கையில் கிளாசுடன் நீச்சல் குளத்தில் இருந்தபடி இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவரை ஏறக்குறைய 4 லட்சம் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். அடுத்தடுத்த சிறப்பான புகைப்படங்கள் இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணப்படுகின்றன.