NEET result release: Tamilian student tops national level | நீட் தேர்வு முடிவு வெளியீடு:தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள்
வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக மற்றும் ஆந்திர மாணவர் முதலிடத்தையும், தமிழகத்தை சேர்ந்த 4 பேர்
முதல் 10 இடங்களிலும் இடம் பிடித்துள்ளனர்.

latest tamil news

மருத்துவம்
மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நுழைவுத்தேர்வான நீட் தேர்வு
நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் 7
ம் தேதி 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 499
நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 20.38 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ,
மாணவியர் பங்கேற்றனர். இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வை 30,536 பேர் தமிழிலும் எழுதியிருந்தனர்.தேர்வு
முடிவுகள் neet.nta.nic.in மற்றும் ntaresults.nic.in என்ற இணையதளத்தில்
வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகம் ஆந்திரா மாணவர்கள் முதலிடம்

தமிழ்நாட்டை
சேர்ந்த பிரபஞ்சன் மற்றும் ஆந்திராவை சேர்ந்த போரா வருண்சக்கரவர்த்தி ஆகிய
மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். முதல் 10 இடங்களை பிடித்தவர்களில் 4
பேர் தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

latest tamil news

நீட்
தேர்வை தமிழகத்தை சேர்ந்த ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 516 பேர் தேர்வு
எழுதினர். இதில் 78,693 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த
பிரபஞ்சன் என்னும் மாணவர் 99.99 மார்க்குள் எடுத்து தேசிய அளவில் முதலிடம்
பிடித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.