NExT தேசிய மருத்துவத் தகுதித் தேர்வு: மோடிக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்

ஒன்றிய அரசு NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வினை கைவிடவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (13-6-2023) கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

எனவே NExT தேர்வு முறையினை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.