Rajinikanth – ரவுடியை தெருவில் ஓடவிட்டு அடித்த ரஜினி.. ஒரு சூப்பர் ப்ளாஷ்பேக்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) ரவுடி ஒருவரை ரஜினிகாந்த் சாலையில் ஓடவிட்டு அடித்தார் சம்பவம் தெரியவந்திருக்கிறது.

பேருந்து நடத்துநராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரஜினிகாந்த், சினிமா மீது இருக்கும் ஆர்வத்தால் வேலையை உதறிவிட்டு சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அதனையடுத்து பாலசந்தர் கண்ணில் பட்டார். அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினியுடன் கமல் ஹாசனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

போராட்டங்களை சந்தித்த ரஜினி: கமல் ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டதால் அவருக்கான போராட்டங்கள் சினிமாவில் கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. ஆனால் ரஜினிக்கு அப்படி இல்லை. எந்த பின்னணியும் இல்லை, ஹீரோவுக்கான முக லட்சணம் இல்லை, கறுப்பாக இருக்கிறார் என பல போராட்டங்களை சந்தித்தவர். இப்போது அவர் சூப்பர் ஸ்டாராக அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக இருந்தாலும் ஆரம்பக்காலட்டத்தில் அவர் கடுமையாக அவமானப்பட்டிருக்கிறார்.

கோழி முட்டை போடலை: உதாரணமாக, ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது ரஜினி பட யூனிட்டில் சாப்பிட்டார். அப்போது ப்ரொடக்‌ஷன் மேனேஜரிடம் இன்னொரு ஆம்லேட் கேட்டார் ரஜினி. அதற்கு அவரோ, கோழி இன்னும் முட்டை போடல. போட்டதும் தரேன் என கூறியிருக்கிறார். இப்படி பல அவமானங்களை சந்தித்திருக்கிறார் ரஜினி. இதனை அவரும் ஏகப்பட்ட மேடைகளில் சொல்லியிருக்கிறார். அதேபோல் சம்பளம் கேட்டதற்கும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்.

ரஜினியின் சாம்ராஜ்ஜியம்: இப்படி பல அவமானங்களையும், போராட்டத்தையும் சந்தித்த ரஜினிகாந்த் தனது திறமையாலும், ஸ்டைலாலும், விடாமுயற்சியாலும் பெரும் வெற்றி கண்டு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவர் இதுவரை 169 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

கோபக்காரர் ரஜினி: ரஜினிகாந்த் இப்போது வயதின் காரணமாகவும், சேர்த்த அனுபவங்கள் காரணமாகவும் பக்குவமாக நடந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவர் தனது இளம் வயதில் ரொம்பவே கோபக்காரராக இருந்திருக்கிறார். நடிக்க வந்த பிறகும்கூட ஏர்போர்ட்டில் பிரச்னை செய்தது, தனது திருமணம் பற்றிய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய விதம் என பல விஷயங்கள் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்தச் சூழலில் ரவுடியை அவர் ஓட ஓட அடித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.

ரஜினியின் தில்: அதாவது ரஜினிகாந்த் பேருந்து நடத்துனராக இருந்தபோது பெருங்களூரில் நாராயணன் என்ற ரவுடி இருந்தாராம். அவரது பெயரை கேட்டாலே அனைவருமே பயப்படுவார்களாம். ஒருமுறை அந்த ரவுடியுடன் ரஜினிக்கு உரசல் ஏற்பட்டுவிட்டதாம். மற்றவர்கள் போல் பயப்படாத ரஜினிகாந்த் நாராயணனை ரோட்டில் ஓட ஓட விரட்டி அடித்தாராம். இதனால் அந்த ரவுடி அதன் பிறகு அடங்கிபோய்விட்டாராம். இந்தத் தகவலை ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். அது தவிர தனது மகளின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்துவருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.