பாலக்காடு:கோவை – சொரணுார் வழித்தடத்தில் மேலும் இரு ரயில் பாதைகள் அமைக்க சர்வே பணிகள் துவங்கியுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சொரணுார் – தமிழகத்தின் கோவை வழித்தடத்தில் தற்போது இரு ரயில் பாதைகள் உள்ளன.
இந்த வழித்தடத்தில் மேலும் இரு ரயில் பாதைகள் அமைக்க சர்வே பணியை ரயில்வே நிர்வாகம் துவங்கியுள்ளது.
இந்த வழித்தடத்தில், 99 கி.மீ.,க்கு பாதை அமைக்க, சர்வே மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, 1.76 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பாலக்காடு கோட்டம் ரயில்வே அதிகாரி கூறியதாவது:
இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்ய ரயில்வே டெண்டர் விட்டுள்ளது. சரக்கு ரயில்களின் வருகை, ரோ-ரோ ரயில் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கோவை – சொரணுார் வழித்தடத்தில் தற்போதுள்ள பாதைக்கு அருகிலேயே இந்தப் புதிய பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சொரணுார் ரோடு பாலத்தின் உயரத்தை மேலும் அதிகரிக்க உப திட்டமும் இத்துடன் பரிசீலிக்கப்படும்.
அதேபோல, தாம்பரம் – செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை – கோவை, அரக்கோணம் – ரேணிகுண்டா, தஞ்சாவூர் – திருவாரூர் ஆகிய வழித்தடங்களிலும் நான்கு பாதைகள் அமைக்க சர்வே நடத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement