புதுடில்லி:நாட்டின் மேற்கு பாலைவனப் பகுதியில், பன்னாட்டு விமான போர் பயிற்சியை நடத்த உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது, இதுவரை செய்யப்படாத வகையில், மிகப் பெரிய போர் பயிற்சியாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
நடப்பு ஆண்டின் இறுதி காலாண்டில் நடத்தப்படும் இந்த பயிற்சியில், அமெரிக்கா உள்பட 10க்கும் மேற்பட்ட முக்கிய நாடுகளின் விமானப்படை கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பயிற்சியின் போது, மிகக் கடினமான போர் முறைகளை இந்நாடுகள் கையாள உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பயிற்சியில், இந்தியாவின் நவீன ஐந்தாம் தலைமுறை ரபேல், நான்காம் தலைமுறை சுகோய் – 30 எஸ், நடுவானில் எரிவாயு நிரப்பும் விமானங்கள் என பல முக்கிய விமானங்கள் பங்கேற்க இருக்கின்றன.
அண்மையில், பிரான்ஸில் நடைபெற்ற ஓரியன் பன்னாட்டு விமான போர் பயிற்சியில், இந்தியாவின் ரபேல் விமானங்கள் பங்கேற்றன.
இதில், நாட்டின் முதல் பெண் பைட்டர் ஜெட் விமானியான ஷிவாங்கி சிங்கும் பங்கேற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement