சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவித்ததை அடுத்து முதல்வர் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் வீட்டில் 17 மணி நேரம் சோதனை நடத்தி உள்ளனர். பிறகு அவர்கள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்கள் அலுவலகத்துக்கு அமைச்சரை அழைத்துச் சென்ற போது அவருக்கு கடும் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். […]
