புதுடெல்லி,
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சரின் கைது நடவடிக்கைக்கு எதிராக பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பாக அக்கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில்,
நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இது அரசியல் துன்புறுத்தல் மற்றும் பிரதமர் மோடி அரசை எதிர்ப்பவர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கை. இந்த வெட்கக்கேடான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் அஞ்சாது என குறிப்பிட்டுள்ளார்.
நள்ளிரவு நடவடிக்கைகளை தமிழ்நாடு காங்கிரஸ் கண்டிக்கிறது.அரசியல் நோக்கத்திற்காக கைது செய்துள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என தமிழக காங். மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.