அரசியலில் நுழைய உள்ளேன்.!! அதிகாரபூர்வமாக வெளியிட்ட நடிகர் சத்தியராஜ் மகள்.!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். இவருடைய மகன் சிபிராஜ். இவரும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக உள்ளார். தமிழ் சினிமாவில் தந்தை மகன் இருவரும் இணைந்து ஒரே படத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. மருத்துவராக இருக்கும் இவர் விரைவில் அரசியலுக்குள் நுழைய இருப்பதாகத் தகவல் வெளியானது. இது குறித்து சத்யராஜ் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.
அந்தப் பேட்டியில், ” ஆமாம்.. அவர் விரைவில் அரசியலுக்குள் நுழைய உள்ளார். அவர் ஒரு கடின உழைப்பாளி. தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவர். நிச்சயம் என்னுடைய ஆதரவு அவருக்கு இருக்கும்” என்றுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திவ்யா தெரிவித்து இருப்பதாவது:- “என்னுடைய கல்லூரி நாட்களிலேயே சமூகநீதி மற்றும் அரசியல் மீதான ஆர்வம் எனக்குத் தொடங்கி விட்டது. என்னுடைய நாட்டு மக்களுக்காக சுயநலம் இல்லாமல் உழைக்கத் தயாராக இருக்கிறேன். அடுத்த மாதம் அரசியலுக்குள் நுழைய உள்ளேன்’ என்றுத் தெரிவித்துள்ளார்.