அமெரிக்க வரலாற்றில் இதுவரை எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிபர் ஜோ பைடன் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு தன் மீது போலி வழக்குகளை பதிவு செய்துவருவதாக டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அரசுக்கு சொந்தமான ரகசிய ஆவணங்களை எடுத்துச்சென்ற வழக்கில் மியாமி நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அதிபர் டிரம்ப் தான் குற்றமற்றவன் என வாதாடினார்.
நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த டிரம்ப், தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவே தன் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.
அங்கிருந்து உணவகம் ஒன்றுக்கு சென்ற டிரம்புக்கு அவரது ஆதரவாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடி வரவேற்றனர்.