ஒரு அமைச்சரை கைது செய்ய என்னென்ன நடைமுறைகள்? செந்தில் பாலாஜி மீது ED ஆக்‌ஷன்!

தமிழக அரசியல் களம் இன்று காலை விடிந்ததில் இருந்தே பரபரப்பாக காட்சியளிக்கிறது. அதற்கு காரணம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை. நேற்றைய தினம் சென்னை, கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. குறிப்பாக தலைமை செயலகத்திற்குள் நுழைந்தது ஆளுங்கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்த ஆட்சிக்கு கரும்புள்ளி என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். இவற்றுக்கு முதலமைச்சர்

எதிர்வினை ஆற்றியிருந்தார். மறுபுறம் செந்தில் பாலாஜியின் வங்கி விவரங்கள், பணப் பரிமாற்ற விவரங்கள் உள்ளிட்டவற்றை சல்லடை போட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை அதிரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளனர். இதற்கிடையில் அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பிற அமைச்சர்கள் நேரில் சந்திக்க மருத்துவமனைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த சூழலில் கைது நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள சட்ட வல்லுநர்கள் உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். வழக்கமாக ஒரு அமைச்சரை கைது செய்ய வேண்டுமெனில் என்னென்ன நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். இதுதொடர்பாக அரசியல் வல்லுநர்களிடம் விசாரிக்கையில்,

கைது மற்றும் வழக்கு தொடர்பான நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சட்டமன்ற செயலகத்திற்கு அளிக்க வேண்டும்.குறிப்பாக சபாநாயகருக்கு விஷயத்தை தெரியப்படுத்த வேண்டும். அவர் தான் எம்.எல்.ஏக்களுக்கு தலைவராக செயல்படக் கூடியவர். தற்போது அப்பாவு சபாநாயகராக இருக்கிறார்.ஒரு அமைச்சரை கைது செய்யப்பட்டால் அதன் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டிய சட்டமன்ற நடைமுறைகள் இருக்கின்றன. அவற்றை சரிவர செயல்படுத்த விஷயத்தை சபாநாயகருக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.தற்போது சட்டமன்ற கூட்டம் நடைபெறாத சூழலில், கைது நடவடிக்கை குறித்து 5 நாட்களுக்குள் பிற எம்.எல்.ஏக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.ஒருவேளை சட்டமன்ற கூட்டம் நடந்தால் கைது பற்றிய தகவல்கள் அவையில் தெரிவிக்கப்படும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.