
ஓ.ஜி படத்தில் இணைந்த ஸ்ரேயா ரெட்டி
இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் படம் ஓ.ஜி. பிரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை, ஐதராபாத் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க திமிரு பட வில்லி ஸ்ரேயா ரெட்டி இணைந்துள்ளார் என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். ஸ்ரேயா ரெட்டி நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த சூழல் வெப் தொடர் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி வருகிறார்.