கரூர் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை முன்னிட்டு கரூரில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறை சோதனையை அடுத்து இன்று அதிகாலை சென்னை பசுமை வழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி […]
