தமிழகத்தில் இனி சிபிஐ விசாரணைக்கு முன்அனுமதி பெற வேண்டும் – அதிரடியில் இறங்கிய தமிழக அரசு!

மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXV of 1946)-ன் பிரிவு 6-ன்படி வகுக்கப்பட்டுள்ளது.

கடந்த 1989 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், மேற்படி சட்டத்தின் கீழ், சிலவகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை. இன்று தமிழ்நாடு அரசு திரும்பப்பெற்று ஆணையிட்டுள்ளது. 

இதன்படி, மத்திய புலனாய்வுத் துறை, தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசின் முன்அனுமதியை பெற்று. விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற ஆணையினை ஏற்கெனவே மேற்குவங்கம், ராஜஸ்தான். கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா போன்ற பாஜக ஆளாத மாநிலங்கள் பிறப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செந்தில்பாலாஜியின் கைது நடவடிக்கை எதிரொலியாகவே தமிழக அரசு இதனை மேற்கொண்டுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.