சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து மயக்க நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வெகு நேரம் சோதனை நடத்தினர். பிறகு, அமைச்சரை விசாரணை நடத்துவதற்காக அழைத்துச் செல்வதாக வீட்டில் இருந்து அழைத்துச் செல்ல முயன்றனர். அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜியின் சகோதரரிடம் அமைச்சரின் கைது குறித்துத் தெரிவிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். செந்தில் […]
