பவுன்சர்களுடன் திவ்யா வீட்டுக்கு வந்த அர்ணவ்

பிரபல சின்னத்திரை நடிகர் அர்ணவ். தன்னுடன் நடித்த திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் திருவேற்காட்டில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். ஒருவர் மீது மற்றொருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிவந்தனர். தன்னை அர்ணவ் அடித்து துன்புறுத்தியதாக திவ்யா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்த அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று அர்ணவ், தன்னுடன் சில வக்கீல்கள் மற்றும் பவுன்சர்கள் என அழைக்கப்படும் பாதுகாவலர்களை அழைத்துக் கொண்டு திருவேற்காட்டில் உள்ள திவ்யா வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை நடிகை திவ்யா வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

வீடு தனது பெயரில் இருப்பதாகவும், தற்போது திவ்யா அத்துமீறி இதில் குடியிருந்து வருவதாகவும் அவர் காலி செய்ய வேண்டும் என அர்ணவ் கூறினார். இந்த வீட்டை வாங்க தனது நகையை கொடுத்ததாகவும், வீட்டிற்கான மாத தவணையை கட்டி வருவதால், இந்த வீடு எனக்கு சொந்தமானது என்று திவ்யா கூறியுள்ளார். இது தொடர்பாக ஆவணங்களை சமர்பிக்குமாறு இருவருக்கும் போலீசார் உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.