
மிதவை பொக்லைன் இயந்திரம் மூலம் காட்டேரி அணையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் இறுதி கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோடை விடுமுறை முடிந்த பிறகு இன்று திறக்கப்பட்ட தொடக்கப்பள்ளி. உற்சாகத்தில் மாணவர்கள்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்குச் திரும்பும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் மற்றும் பூ கொடுத்து வரவேற்ற தலைமையாசிரியர்.

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் என்.சி.சி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்.

போடிநாயக்கனூரிலிருந்து சென்னை வரையிலான பயணிகள் ரயில் சேவை துவங்கவவுள்ள நிலையில், மதுரையிலிருந்து போடிநாயக்கனூர் வரை 110 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பயின்ற பள்ளியில் புதிதாகச் சேர்ந்த குழந்தைகள் நெல்மணியில் ஆசிரியர் உதவியுடன் எழுதினர்.

மீன் பிடி தடைக்காலம் நிறைவு பெறுவதையொட்டி பாம்பன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகினர்.

சாலையோரம் முட்புதருக்குள், போலீஸார் பாதுகாப்புப் பணியின்போது பயன்படுத்திய 60-க்கும் மேற்பட்ட கவச உடைகள் மற்றும் தலை கவசங்கள் வீசப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குருதி கொடையாளர் தினமான இன்று இரத்த தானத்தை வலியுறுத்தி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக இரத்த தான தினத்தையொட்டி மாணவ மாணவிகளுக்கு தொடர் ஓட்டம் நடைபெற்றது.

பெண்களை மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோசமாக அவசரகதியில் அமைக்கப்பட்ட தார் சாலையின் நிலை!
புதிய பாடப் புத்தகங்களுடன் தொடக்கப்பள்ளி குழந்தைகள்!

தமிழகத்தில் முதன் முறையாக லூலு குழுமத்தின் சார்பில் புதிய ஹைப்பர் மார்க்கெட் தமிழக தொழில்துறை அமைச்சரால் திறக்கப்பட்டது.