
முதல் கணவர் யாரா? – நீலிமாவின் கூல் பதில்
பிரபல நடிகை நீலிமா ராணி அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நீலிமா குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை நெறியாளர் வாசித்து காண்பித்தார். அப்போது நீலிமாவின் முதல் கணவர் யார்? என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டதாக சொல்ல, அதை கேட்டு நீலிமா சிரித்துக்கொண்டே 'எனக்கு ஒரே கணவர் இசைவாணன் தான். எனக்கு முதல் கணவனும் இசைவாணன் தான், இரண்டாவது கணவனும் இசைவாணன் தான்' என பதிலளித்துள்ளார். நீலிமாவிற்கும் – இசைவாணனுக்கும் இடையே கிட்டத்தட்ட 11 வயது வித்தியாசம் இருக்கிறது. இந்த காரணத்தினால் தான் நீலிமா இசைவாணன் குறித்து பல்வேறு ஏடாகூடமான கேள்விகளை நெட்டீசன்கள் தேடியும், இண்ஸ்டாகிராமில் நீலிமாவிடமே கேட்டும் கலாய்த்து வருகின்றனர். இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நீலிமா, இதுபோன்ற கேள்விகளை தற்போது கூலாக சமாளித்து வருகிறார்.