லோகேஷ் கனகராஜ் படம் : அனுராக்கின் ஆசை
பாலிவுட்டின் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யாப். தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். தமிழில் நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தார். இப்போது கென்னடி என்ற படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இந்தபடம் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : ‛‛லோகேஷ் கனராஜின் படங்களில் நடிக்க விரும்புகிறேன். லோகேஷின் யுனிவர்ஸ் படங்களில் எனக்கு பெரிய கேரக்டர் எதுவும் தேவையில்லை. அவர் படம் மூலம் புகழை பெறுவதற்கு அவர் இயக்கத்தில் ஒரு சாகும் காட்சியிலாவது நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்'' என்கிறார்.