அபுஜா, நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 103 பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் குவாரா மாகாணத்தின் பதிகி மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள், அண்டை மாகாணமான நைஜரில் நடந்த திருமண நிகழ்வில் பங்கேற்று விட்டு, தங்கள் சொந்த ஊருக்கு நேற்று படகில் திரும்பினர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக படகு ஆற்றில் மூழ்கி கவிழ்ந்தது. தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், உயிருக்கு போராடிய 100க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.
எனினும், ஆற்றில் மூழ்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 103 பேர் பலியாகினர். சிலர் மாயமாகி உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
படகில் அளவுக்கு அதிகமான பயணியரை ஏற்றிச் செல்வது, மோசமான பராமரிப்பு போன்ற காரணங்களால், இப்பகுதிகளில் படகு கவிழும் விபத்துகள் அதிகளவில் நடைபெறுவதாக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement