18 மணி நேர டார்ச்சர், செந்தில் பாலாஜி கைதுக்கு முன்பு எல்லாமே தப்பு தப்பா… மா.சுப்பிரமணியன் பகீர்!

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், சட்டமன்ற தேர்தலில் தான் தோற்றதற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என நினைத்து அவரை பழிவாங்கும் நோக்கில் சுற்றி திரிகிறார் அண்ணாமலை.

செந்தில் பாலாஜியை 18 மணி நேரத்திற்கு மேல் அடைத்து வைத்து டார்ச்சர் செய்துள்ளனர். பாஜகவின் கிளை அமைப்பு போல் அமலாக்கத்துறை செயல்படுகிறது. திமுக மட்டுமின்றி அதிமுகவையும் மிரட்ட விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது.

அமலாக்கத்துறையினர் தங்கள் எஜமானர்களான மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை திருப்திபடுத்தி உள்ளனர். மத்திய பாஜக ஆட்சியின் தோல்விகளை மறைக்க நடத்தும் நாடகம் தான் கைது நடவடிக்கை. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சிகள் மீது வழக்கு போட்டு, அவர்களின் செயல்பாடுகளை முடக்க பாஜக முயற்சிக்கிறது. செந்தில் பாலாஜியின் கைது என்பது ஜனநாயகப் படுகொலை.

மக்களவை தேர்தலுக்கு முன்பாக திமுகவை கார்னர் செய்யும் முயற்சி. குறிப்பாக திமுகவை ஊழல் கட்சி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்த ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கின்றனர்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்தவிதமான விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை. கைதுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பி விசாரிக்க வேண்டிய நடைமுறையை பின்பற்றவில்லை. செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிக்கும் அளவிற்கு அமலாக்கத்துறை நடந்தியிருக்கிறது என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.