Adipurush: 'ஆதிபுருஷ்' படத்துக்கான டிக்கெட் விலை இவ்வளவா..?: அலறும் ரசிகர்கள்.!

பிரபாஸ் இயக்கத்தில் அடுத்த பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘ஆதிபுருஷ்’. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் கடந்த சில வாரங்களாகவே மும்முரமாக நடந்து வந்தது. இந்தப்படத்தின் ரிலீஸ் பணிகளும் படு ஜோராக நடந்தது. இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ திரையரங்கு டிக்கெட் விலை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு ‘ஆதிபுருஷ்’ படத்தை இயக்கியுள்ளார் ஓம் ராவத். பிரபாஸ், கீர்த்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்டோர் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். 500 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது இந்தப்படம். ராமராக ராம்சரண், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சைப் அலிகான் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

3டி அனிமேஷன் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ டீசர் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்தது. டீசரே பொம்மை படம் போல் இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளினர். இதனால் கிராப்பிக்ஸ் குறைகளை சரி செய்ய அதிக நாட்களை படக்குழு பயன்படுத்தியது.

Kamal Haasan: ‘விக்ரம்’ பட பாணியில் உருவாகும் KH 233: பெருசா பிளான் போடும் ஆண்டவர்.!

தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ‘ஆதிபுருஷ்’ படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் வரும் 16 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தப்படத்தின் டிக்கெட் முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையில் டெல்லியில் உள்ள பிவிஆர் வேகாஸ் லக்ஸ் தியேட்டரில் ‘ஆதிபுருஷ்’ படத்தின் முதல் காட்சிக்கான டிக்கெட் ரூ. 2 ஆயிரம் வரை விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Vidaamuyarchi: வேகமெடுக்கும் அஜித்தின் ‘விடாமுயற்சி’: லைகாவின் வேறலெவல் திட்டம்.!

அதே போல் நொய்டாவில் இருக்கும் பிவிஆர் சிட்டி சென்டரில் 1650 ரூபாய் வரை டிக்கெட் விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையில் ‘ஆதிபுருஷ்’ வெளியாகும் திரையரங்குகளில் அனுமனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி அனுமனுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் சீட்டுக்கு பக்கத்து சீட்டுக்கான டிக்கெட் விலையும் அதிகளவில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.