Ajith: ஒவ்வொரு முறையும் அஜித் கத்தி அழுவார்..பாக்கவே கஷ்டமா இருக்கும்..உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
அஜித் தமிழ் சினிமாவில் அடைந்த உயரம் பற்றி நாம் அனைவர்க்கும் தெரியும். மேலும் இந்த உயரத்தை அஜித் அடைய எவ்வளவு தடைகளையும் போராட்டங்களையும் கடந்து வந்துள்ளார் என்பது பற்றியும் அனைவர்க்கும் தெரியும். அதன் காரணமாகவே அஜித்திற்கு இந்தளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர் எனலாம்.

வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு ரசிகர்கள் இவரை ரசிக்க காரணம் அவரின் தன்னம்பிகையும் , அவரின் குணமும் தான். ரசிகர்கள் தனக்காக நேரத்தையும் பணத்தையும் செலவிடுவதை பார்த்துவிட்டு ரசிகர் மன்றமே வேண்டாம் என்றவர் தான் அஜித். இந்த முடிவை மற்ற ஹீரோக்கள் எடுப்பார்களா என்பது சற்று சந்தேகம் தான்.

அஜித்துடன் ரோபோ ஷங்கர்

அந்தளவிற்கு ரசிகர்கள் மேல் அன்புகொண்ட அஜித் தற்போது விடாமுயற்சி படத்திற்காக தயாராகி வருகின்றார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் அஜித்தை பற்றி பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் உருக்கமாக பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது. அஜித், விஜய், சிம்பு என பல நடிகர்களுடன் பிசியாக நடித்து வந்த ரோபோ ஷங்கர் திடீரென உடல் எடையெல்லாம் குறைந்து காணப்பட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் ரோபோ ஷங்கருக்கு என்னானது என கவலைப்பட்டனர்..

அஜித்தின் கஷ்டம் பற்றி பேசிய ரோபோ ஷங்கர்

இதையடுத்து அவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் தான் உடல் எடை குறைந்து காணப்பட்டார் என்றும், தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் பற்றி பேசிய அவர், மற்ற ஹீரோக்கள் ஒரு படத்தை முடித்துவிட்டு டூர் செல்வார்கள்.

ஆனால் அஜித் மருத்துவமனைக்கு செல்வார். மூட்டில் அஜித்திற்கு பல பிரச்சனைகள் இருக்கின்றது. அந்த வலியோடு தான் விஸ்வாசம் படத்தில் அடிச்சு தூக்கு பாடலுக்கு நடனமாடினார். ஒவ்வொரு ஷாட் முடியும்போதும் தனியாக சென்று வலியால் துடிப்பார் அஜித். அதனை பார்த்தல் ரொம்ப கஷ்டமாக இருக்கும்.

ஆனால் அந்த வலியை வெளியே காட்டிக்கொள்ளாமல் மிகவும் இயல்பாக இருப்பார். இயக்குனர் மற்றும் மற்ற நடிகர்களுக்கு நல்லஒத்துழைப்பு அளிப்பார் அஜித் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் ரோபோ ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.