புதுடில்லி:’வால்வோ கார் இந்தியா’ நிறுவனம், அதன் ‘சி – 40 ரீசார்ஜ்’ என்ற புதிய மின்சார கூப் எஸ்.யு.வி., காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்நிறுவனத்திற்கு இரண்டாவது மின்சார காராகும்.
இந்த காருக்கான முன்பதிவுகள் ஆகஸ்ட் மாதத்திலும், வினியோகம் செப்டம்பரிலும் துவங்குகின்றன.
இந்த கார், மொத்தம் ஆறு நிறங்களில் வருகிறது. சந்தையில் இருக்கும் வால்வோ ‘எக்ஸ்.சி., – 40 ரீசார்ஜ்’ மின்சார காரின் அதே சி.எம்.ஏ., கட்டுமான தளத்தில் தான், இந்த காரும் கட்டமைக்கப்படுகிறது.
வால்வோவின் விசேஷ கிரில், ஸ்டைலான எல்.இ.டி., லைட்டுகள், 19 அங்குல ஐந்து ஸ்போக் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், ஸ்லோபிங் ரூப் லைன் உடல் வாகு ஆகியவை, மற்ற ஆடம்பர மின்சார கார்களில் இருந்து இந்த காரை தனித்து காட்டுகிறது.
இதன் உட்புறத்தில், 9 அங்குல டச் ஸ்கிரீன், 13 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மன் கார்டன் சவுண்டு சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் உட்பட, பல பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த காராக இது திகழ்கிறது.
இந்த காரின் விலை, 60 லட்சம் ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரி 78 கி.வாட்.,
ஹார்ஸ் பவர் 406 பி.எஸ்.,
டார்க் 660 என்.எம்.,
டாப் ஸ்பீடு 180 கி.மீ.,
ரேஞ்ச் 530 கி.மீ.,
(0 – 100 கி.மீ.,) பிக்., அப் 4.7 நொடிகள்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்