தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் பாலிவுட், ஹாலிவுட் என பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தனுஷின் நடிப்பில் அடுத்ததாக ‘கேப்டன் மில்லர்’ படம் வெளியாகவுள்ளது. இதனிடையில் தனது அடுத்த படமான D50 படத்தை தனுஷே இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பும் அண்மையில் வெளியானது.
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்கு பிறகு தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘வாத்தி’ வெளியானது. தமிழ், தெலுங்கு மொழியில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ரிலீசான இந்த்ப்படத்தில் சம்யுக்தா, சமுத்திரக்கனி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ராக்கி, சாணிக்காயிதம் போன்ற இரத்தம் தெறிக்க தெறிக்க வெளியான ராவான படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் எக்க்சசக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. பீரியட் பிலிமான இதில் நடிக்க நீண்ட தலைமுடி, தாடி என மாஸான லுக்கில் வலம் வருகிறார் தனுஷ். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தனுஷின் அடுத்த படமான D50 குறித்து அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால், சந்தீப் கிஷன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. எஸ்.ஜே. சூர்யா தனுஷின் அண்ணனாகவும், சந்தீப் கிஷன் தம்பியாகவும், விஷ்ணு விஷால் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிலும் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் அபர்ணா பாலமுரளி இந்தப்படத்தில் சந்தீப் கிஷன் ஜோடியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
Thangalaan: பிரேக்கிற்கு பிறகு வேகமெடுக்கும் ‘தங்கலான்’: எகிறும் எதிர்பார்ப்பு.!
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி உண்மையில்லை. அந்தப்படத்தில் நடிக்க நானும் விரும்புகிறேன். ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களால் இந்த வாய்ப்பை ஏற்க முடியவில்லை. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். அவர் எந்த படம் என்று கூறிப்பிடவில்லை என்றாலும், D50 குறித்தே விஷ்ணு விஷால் விளக்கமளித்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
விஷ்ணு விஷால் தற்போது ‘லால் சலாம்’ படத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இதனையடுத்து ‘கட்டா குஸ்தி’ பட இயக்குனர் மற்றும் ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் ஆகியோரின் பட்ங்களில் விஷ்ணு விஷால் நடிப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் D50 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதும், படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Leo: ‘லியோ’ படம் இப்படித்தான் ரிலீஸ் ஆக போகுதாம்: வெளியான மாஸ் தகவல்.!