சென்னை: Dhanush 50 (தனுஷ் 50) தனுஷின் 50ஆவது படத்தின் சீக்ரெட்ஸ் பற்றிய தகவல்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
வாத்தி படத்துக்கு பிறகு தனுஷ் இப்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். ராக்கி, சாணிக்காயிதம் படங்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியாகி கவனம் ஈர்த்ததால் கேப்டன் மில்லர் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதன் ஷூட்டிங் தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவந்த சூழலில் இப்போது மதுரையில் விறுவிறுப்பாக சிக்கல் எதுவுமின்றி நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் 50: இந்தச் சூழலில் தனுஷின் 50ஆவது படம் பற்றிய தகவல்கள்தான் கடந்த சில நாள்களாக கோலிவுட் ஹெட்லைன்ஸாக இருக்கின்றன. சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் அந்தப் படத்தை தனுஷே இயக்குகிறார். ராஜ்கிரணை அவர் வைத்து இயக்கிய தனது முதல் படமான பவர் பாண்டி ஹிட்டடித்ததால் இந்தப் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள்.
வடசென்னை மையம்: மேலும் படமானது வடசென்னையை மையப்படுத்தி உருவாகவிருக்கிறது. படத்துக்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என பேசப்படுகிறது. வடசென்னையை பற்றிய படம் என தகவல் வெளியானதால் வெற்றிமாறனின் வடசென்னை சாயல் அடித்துவிடக்கூடாது. அதற்காக தனுஷ் எப்படியெல்லாம் மெனக்கெடப்போகிறார் என்ற கேள்வியையும் கோடம்பாக்கம் எழுப்பிவருகிறது.
படத்தில் யார் யார்?: இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக அபர்ணா பாலமுரளி நடிப்பார், சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் தனுஷின் சகோதரர்களாக நடிப்பார்கள். இவர்கள் தவிர எஸ்.ஜே.சூர்யா மெயின் வில்லனாக நடிப்பார் எனவும் பேசப்பட்டது. இவற்றில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பது மட்டும் இப்போதைக்கு உறுதியாகியிருக்கிறது. அதேசமயம் தனுஷ் 50ல் தான் நடிக்கவில்லை என்பதை விஷ்ணு விஷால் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ட்விட்டர் பதிவு: இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “நான் அந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதாக பரவிய செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் அப்படத்தில் நடிக்க விரும்பினாலும் என்னுடைய மற்ற வேலைகள் காரணமாக என்னால் அதில் நடிக்க இயலவில்லை. எனது சார்பில் படக்குழுவினருக்கு வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருந்தார். அவர் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்தும்விட்டார். இருப்பினும் தனுஷ் படத்தில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
தனுஷ் 50 சீக்ரெட்ஸ்: இந்நிலையில் படம் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகின. அதாவது வில்லனாக புக் ஆகியிருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து திவீர டிஸ்கஷன் செய்து படத்தின் காட்சிகளை செதுக்கிவருகிறாராம் தனுஷ். அதேபோல் தாந்து வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளையும் படத்துக்குள் எமோஷனல் டச்சோடு சேர்த்திருக்கிறாராம்.
இப்படி இயக்குநராக வெல்ல வேண்டும் என அவர் தீவிரமாக உழைத்தாலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்டோர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமே என கூறியதற்கு, இந்த ஒரு படத்தை மட்டும் இயக்கிக்கொள்கிறேன் என ஸ்ட்ரிக்ட்டாக தனுஷ் கூறியதாக பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.