வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,:’நாடு முழுவதற்குமான பொது சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்துக்களை தெரிவிக்கலாம்’ என, சட்டக் கமிஷன் அறிவித்துள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து, 2018 ஆக.,ல் பதவிக்காலம் முடிந்த, 21வது சட்டக் கமிஷன் இரண்டு முறை பொதுமக்களின் கருத்துக்களை கேட்டது. இதைத் தொடர்ந்து, குடும்ப சட்டங்களில் சீர்திருத்தம் என்ற பெயரில், 2018ல் ஆய்வறிக்கையையும் தாக்கல் செய்தது.
இந்நிலையில், 22வது சட்டக் கமிஷன், வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ள தாவது:ஏற்கனவே கருத்துக் கேட்பு நடந்து மூன்று ஆண்டுகளாகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பல நீதிமன்றங்கள் உத்தரவுகளை பிறப்பித்து உள்ளன. மத்திய சட்டம்
மற்றும் நீதி அமைச்சகத்தின் குறிப்பை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய மத அமைப்புகளின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து, 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை membersecretary–[email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக தெரிவிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement