புதுடில்லி, எல்லை பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ, இந்தியா – வங்கதேசம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நம் அண்டை நாடான வங்கதேசத்துடன், 4,096 கி.மீ., துார எல்லையை பகிர்ந்து கொள்கிறோம்.
வங்கதேசத்தில் இருந்து பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் ஊடுருவுவதும், கடத்தல் நடப்பதும் அதிகளவில் உள்ளது. இதை தடுப்பதற்காக, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், எல்லை பாதுகாப்பு படை மற்றும் வங்கதேச எல்லைப் படையின் தலைவர்களின் கூட்டம், புதுடில்லியின் சாவ்லாவில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை முகாமில் நான்கு நாட்கள் நடந்தது.
இந்த கூட்டத்தில், எல்லையில் பெய்லியில் பாலம் கட்டுவது, சாலை மேம்பாட்டு பணிகளை மேற்கொள்வது அசாம், மேற்கு வங்கம்., மிசோரம், மேகாலயா, திரிபுராவின் எல்லையில் உள்ள தடுப்பு சுவர்களை வலுப்படுத்துவது உட்பட, ஐந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தப் பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement