லண்டன், வடக்கு லண்டனில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 27 வயது பெண், கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். சந்தேகத்தின்படி இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்துஉள்ளனர்.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் வடக்கு பகுதியில் வெம்ப்ளி நகரம் உள்ளது.
இங்குள்ள ‘நீல்ட் கிரெசன்ட்’ என்ற குடியிருப்பு பகுதியில், இந்திய வம்சாவளி பெண்கள் இருவர் கத்தியால் குத்தப்பட்டனர்.
இந்த சம்பவம், நேற்று முன்தினம் காலை அப்பகுதியின் சாலை ஓரத்தில் நடந்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. இதன்பின் கத்தி குத்துப்பட்டு கிடந்த இரு பெண்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி ஒரு பெண் உயிரிழந்தார்.
அவர், தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த கொந்தம் தேஜஸ்வினி, 27, என்பது விசாரணையில் தெரியவந்தது. காயம் அடைந்த மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு இளைஞர்கள், ஒரு பெண்ணை போலீசார் பிடித்து விசாரித்தனர். பெண்ணை விடுவித்துவிட்டு, இளைஞர்களை மட்டும் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement