Kamal – கமல் – மணிரத்னம் கூட்டணி என்னதான் ஆச்சு?.. லேட்டஸ்ட் அப்டேட்

சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசனுடன் இணையும் படத்துக்காக இயக்குநர் மணிரத்னம் இப்போது கொடைக்கானலில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய சினிமாவின் பெரும் அடையாளங்களில் ஒருவர் கமல் ஹாசன். சில வருடங்களுக்கு முன்னர் சினிமாவிலிருந்து ஒதுங்கி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். சினிமாவில் வென்றது போல் அரசியலிலும் பெரிய ரவுண்டு வரலாம் என்ற கமல் ஹாசனின் கணக்கு பொய்த்துப்போனது. இருப்பினும் அரசியல் சம்பந்தமாக அவ்வப்போது கருத்துக்களை கூறிவரும் அவர், கட்சி தொடர்பான கூட்டத்தையும் நடத்திவருகிறார். இன்று நடிகை வினோதினியும் மநீமவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

ரீ என்ட்ரி: சூழல் இப்படி இருக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் நடித்து ரீ என் ட்ரி கொடுத்தார். கமல் ஹாசனின் அட்டகாசமான நடிப்பு, லோகேஷ் கனகராஜின் அசத்தலான மேக்கிங் என படம் அருமையாக இருந்ததால் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 500 கோடி ரூபாய் அளவு வசூலித்தது. விக்ரம் கொடுத்த வெற்றி கமலுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கும் கமிட்டாகியிருக்கிறார்.

ஷங்கர் – கமல்: அந்த வகையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 கிடப்பில் போடப்பட்டது. அதனையடுத்து பல முயற்சிகளுக்கு பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டை காட்சி ஒன்று தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்பட்டது. இதன் அடுத்தக்கட்ட ஷூட்டிங் அதாவது க்ளைமேக்ச் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சூரத்தில் நடந்த ஷெட்யூல் முடிந்தது.

க்ளாசிக் கூட்டணி: விக்ரம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தை அடுத்து சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் கமல்.அந்தவகையில் படங்களை தயாரிக்கவும் செய்யும் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே கமல் ஹாசன் – மணிரத்னம் இணைந்த நாயகன் திரைப்படம் இந்தியா சினிமாக்களில் அழிக்க முடியாத க்ளாசிக் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் எந்தப் படம்?: மணிரத்னத்துடன் கமல் இணையும் படம்தான் முதலில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஹெச்.வினோத்துடன் இணையும் படம்தான் முதலில் தொடங்கப்படும் என கருதப்படுகிறது.அதற்கேற்றபடி சமீபத்தில் நெல் ஜெயராமன் அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கமல் ஹாசனுடன் ஹெச்.வினோத்தும் கலந்துகொண்டார். எனவே இருவரும் இணையும் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குவது உறுதி என ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கலாம் என கூறப்படுகிறது.

கமல் 234?: இந்நிலையில் மணிரத்னமும், கமல் ஹாசனும் இணையும் படம் பற்றிய அப்டேட் எதுவுமே வரவில்லையே என ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்தனர். தற்போது அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது கொடைக்கானலில் இருக்கும் தனது வீட்டில் இருந்தபடி கமல் ஹாசனுடன் இணையும் படத்துகான கதையை தயார் செய்யும் பணியில் மணிரத்னம் முழுமூச்சாக இறங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.