சென்னை: மாமன்னன் பட ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் மாம்பழத்தை குழந்தையை போல ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் எப்போதுமே தனது குறும்புத் தனங்களை இன்ஸ்டாகிராமில் வீடியோக்கள் மூலம் வெளிப்படுத்தி வருவதை வாடிக்கையாக கொண்டு வருகிறார்.
வெறும் ஹாட் போட்டோஷூட்களை மட்டும் பதிவிடாமல், நாய்க்குட்டியுடன் கொஞ்சுவது, காற்றாடி விடுவது, வீணை வாசிப்பது யோகா செய்வது என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது மாம்பழம் ஒன்றை சாப்பிடும் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
கல்லூரி மாணவியா கீர்த்தி சுரேஷ்: மாமன்னன் படத்தின் கொடிபறக்குற காலம் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜூன் 13ம் தேதி தாறுமாறாக வெளியாகி ஹிட்டானது. அந்த பாடலில் கீர்த்தி சுரேஷ் அரசு கல்லூரி ஆண்டு விழாவில் நடனம் ஆடுவது போல காட்சிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ் என்றும் மலர் டீச்சர் போல கல்லூரி ஆசிரியரா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
உமன் சென்ட்ரிக் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். விரைவில் வெளியாக உள்ள மாமன்னன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் கீர்த்தி சுரேஷ் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாம்பழம் சாப்பிடும் வீடியோ: மாம்பழம் சாப்பிடும் போது கூந்தல் டிஸ்டர்ப் பண்ணிடக் கூடாது (வீடியோவில் ஃபேஸ் தெரியணும்) என்பதற்காக சிண்டை முடிந்து கொண்டு பந்தூரி மாம்பழத்தை ஒரு பிடி பிடித்து ரசித்து ருசித்து சாப்பிடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குழந்தை தோத்துடும்: நடிகை கீர்த்தி சுரேஷ் கைகளில் எல்லாம் மாம்பழம் பிசுபிசுன்னு ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு மாம்பழத்தை சாப்பிட்டதை பார்த்த ரசிகர்கள் குழந்தை தோத்துப்போயிடும் அப்படி சாப்பிடுறீங்க என்றும் ஒரு மாம்பழமே மாம்பழம் சாப்பிடுகிறதே என்றும் கொடுத்த வச்ச மாம்பழம் என்றும் கமெண்ட்டுகளை போட்டு ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தமிழில் மாமன்னன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக போலா சங்கர் படத்தில் நடித்து வருகிறார்.