ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
உச்சத்திற்கு சென்ற மார்க்கெட்சிவகார்த்திகேயன் இடையில் சில காலம் தோல்வி படங்களாக கொடுத்து வந்தார். அந்த சமயத்தில் அவரது மார்க்கெட் சற்று ஆட்டம் கண்டது. அப்போது தான் நெல்சனின் இயக்கத்தில் டாக்டர் திரைப்படம் வெளியானது. இப்படம் மெகாஹிட் வெற்றியை பெற மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார் சிவகார்த்திகேயன். இதையடுத்து அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் வெளியாகி மாஸ் ஹிட்டடித்தது. தொடர்ந்து இரு படங்கள் நூறு கோடி வசூலித்தால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சம் பெற்றது
வித்யாசமான கதைக்களங்கள்தற்போது சிவகார்த்திகேயன் வித்யாசமான கதைக்களங்களை கொண்ட படங்களாக தேர்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் மண்டேலா படத்தை இயக்கிய அஸ்வினின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். தற்போது இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகின்றார் சிவகார்த்திகேயன். இப்படம் வித்யாசமான கதைக்களத்தில் தான் உருவாகி வருகின்றது. இவ்வாறு அடுத்தடுத்து வித்யாசமான மற்றும் அழுத்தமான படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார்
மாவீரன் ரிலீஸ் குழப்பம்சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் திரைப்படம் முதலில் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாவதாக இருந்தது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தது. ஆனால் அதே நாளில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாவதாக வந்த அறிவிப்பால் மாவீரன் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாக முடிவெடுத்தது. ஜூலை 14 ஆம் தேதி சோலோவாக மாவீரன் திரைப்படம் வெளியாகின்றது. ஆனால் அதே நாளில் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படமும் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. எனவே மாவீரன் படத்திற்கு கடுமையான போட்டி இருக்கும் என் எதிர்பார்க்கபார்க்கப்படுகின்றது. இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாவீரன் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருக்கின்றன
சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம்இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றிய ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஓவியராக நடிக்கிறாராம். காமிக் ஆர்டிஸ்டாக மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதுவரை சிவகார்த்திகேயன் இது மாதிரியான ரோலில் நடித்ததில்லை என்பதால் இப்படம் சிவகார்த்திகேயனின் படங்களில் இருந்து வித்யாசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்ஷன் கலந்த எமோஷனல் படமாக உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் வித்யாசமான சிவகார்த்திகேயனை ரசிகர்களுக்கு கொடுக்குமாம். அந்தளவிற்கு இப்படத்தில் வித்யாசமாக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன் என தகவல்கள் வருகின்றன. மேலும் சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது