Mrunal Thakur: விஜய்க்கு ஜோடியாகும் 'சீதா ராமம்' மிருணாள் தாகூர்: அடுத்த ஹிட் பார்சல்.!

‘சீதா ராமம்’ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனங்களையும் கொள்ளையடித்தவர் மிருணாள் தாகூர். இந்தப்படத்தில் துலகர் சல்மான் ஜோடியாக இளவரசி நூர்ஜஹான் கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவுள்ள அடுத்த படம் பூஜையுடன் துவங்கியுள்ளது..

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
விஜய தேவரகொண்டா, பரசுராம் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு அண்மையில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. தில் ராஜு, சிரிஷ் தின் ஆகியோர் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘கீதா கோவிந்தம்’ படத்திற்கு விஜய், பரசுராம் மீண்டும் இணைந்துள்ளனர். அந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவின் ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதை போல, ‘VD13’ படத்தில் விஜய், மிருணாள் தாகூர் ஜோடி பெரிய அளவில் பேசப்பட்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Rajini: சாரே கொல மாஸ்.. மொய்தீன் பாயாக மிரட்டும் ரஜினி: தீயாய் பரவும் வீடியோ.!

கீதா கோவிந்தம் படத்தினை போல இந்தப்படமும் காதல் கலந்த பேமிலி டிராமாவாக உருவாகவுள்ளதாகவும், மிருணாள் தாகூருக்கு இந்தப்படத்தில் வெயிட்டான ரோல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார். சிவா நிர்வாணா இயக்கும் இந்தப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். ‘லிகர்’ படு தோல்விக்கு பிறகு விஜய தேவரகொண்டா தனது அடுத்தடுத்த படங்களை கவனமாக தேர்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanush: எனக்கும் ஆசைதான், ஆனா.. ‘D50’ படம் குறித்து உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.