இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Sexual harassment victims must speak up: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது திரைத்துறையில் மட்டும் இல்லை அனைத்து துறைகளிலும் இருக்கிறது என்கிறார் ப்ரியா பவானிசங்கர்.
ப்ரியா பவானிசங்கர்சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது பற்றி பலரும் பேசி வருகிறார்கள். இந்நிலையில் ப்ரியா பவானிசங்கரும் அது குறித்து பேசியிருக்கிறார். பாலியல் தொல்லை என்பது சினிமா துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தான் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.சமுத்திரக்கனிஅடுத்து பவன்கல்யாண் படத்துடன் சந்திக்கிறேன்பாலியல் தொல்லைப்ரியா பவானிசங்கர் மேலும் கூறியிருப்பதாவது, பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் தைரியமாக பேச வேண்டும். அதை விட முக்கியமானது அவர்கள் சொல்வதை நம் சமூகம் கேட்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை குறை சொல்வதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். நீ ஏன் இதை முன்பே சொல்லவில்லை, ஏன் இப்போ சொல்கிறாய் என்பது போன்ற கேள்விகளை கேட்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்.
பெண்கள்பாலியல் தொல்லை பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது. ஒரு பெண் எந்த துறையில் வேலை செய்கிறார், எது மாதிரியான வேலை செய்கிறார் என்கிற பாகுபாடு இல்லாமல் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார். பாதிக்கப்பட்டது குறித்து பெண்கள் பேசினால் நாம் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், ஆதரவு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என ப்ரியா பவானிசங்கர் தெரிவித்துள்ளார்.
Dhanush: 90 நாள், 500 வீடு: ப்ப்பா, வேற மாதிரி பிளான் போட்டிருக்கும் தனுஷ்
வைரமுத்துவைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன், எனக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக் கூடாது: பாடகி புவனா சேஷன்கவிப்பேரசசு வைரமுத்துவால் நானும் பாதிக்கப்பட்டேன். எனக்கு நடந்தது போன்று வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. வைரமுத்துவுக்கு எதிராக தைரியமாக பேசிய பாடகி சின்மயியை பாராட்டுகிறேன் என பாடகி புவனா சேஷன் அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்களை குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என ப்ரியா பவானிசங்கர் கூறியிருக்கிறார்.
நடிகைகள்பாலியல் தொல்லை திரைத்துறையில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் இருக்கிறது என சில முன்னணி நடிகைகள் முன்பு தெரிவித்தார்கள். சினிமா துறையில் பாலியல் தொல்லை எல்லாம் சர்வ சாதாரண விஷயம் என சில பிரபல நடிகைகள் தெரிவித்தனர். இந்நிலையில் பாலியல் தொல்லை குறித்து ப்ரியா பவானிசங்கரும் பேசியிருக்கிறார்.
பொம்மைகெரியரை பொறுத்தவரை ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து பொம்மை படத்தில் நடித்திருக்கிறார் ப்ரியா பவானிசங்கர். அந்த படம் ஜூன் 16ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. எஸ்.ஜே. சூர்யாவின் கற்பனையில் வரும் பொம்மையாக ப்ரியா நடித்திருக்கிறார். அண்மையில் வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானிசங்கரின் லிப் லாக் காட்சி குறித்து ரசிகர்கள் பரபரப்பாக பேசினார்கள்.
கை நிறைய படங்கள்ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ப்ரியா பவானிசங்கர். அவர் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ் தவிர்த்து தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ப்ரியா. தெலுங்கு ரசிகர்களுக்கும் ப்ரியாவை ரொம்ப பிடித்துவிட்டது.