Rajini: சாரே கொல மாஸ்.. மொய்தீன் பாயாக மிரட்டும் ரஜினி: தீயாய் பரவும் வீடியோ.!

ரஜினி நடிப்பில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘ஜெயிலர்’ படம் உருவாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வந்த இதன் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக நிறைவடைந்தது. இதனிடையில் தனது மகளின் ‘லால் சலாம்’ படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகியுள்ள மாஸான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘3’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து ‘வை ராஜா வை’ என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் ‘லால் சலாம்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் ஐஸ்வர்யா. விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

‘லால் சலாம்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் ரஜினி. இதனால் இந்தப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் கிரிக்கெட் விளையாட்டை மையமாக ‘லால் சலாம்’ படத்தை இயக்கி வருகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப்படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.

இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அண்மையில் இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்றது. அங்கு படப்பிடிப்பின் போது ஜிப்பா, வெள்ளை நிற உடை என மொய்தீன் பாய் லுக்கில் மாஸ் காட்டியுள்ளார் ரஜினி. இதுதொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Dhanush: எனக்கும் ஆசைதான், ஆனா.. ‘D50’ படம் குறித்து உண்மையை சொன்ன விஷ்ணு விஷால்.!

ரஜினி நடிப்பில் அடுத்ததாக ‘ஜெயிலர்’ படம் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப்படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் டார்க் காமெடி படங்களை இயக்கி வரவேற்பை பெற்றவர் நெல்சன். இவரது இயக்கத்தில் ரஜினி நடிப்பது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்தப்படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் இயக்கி வருகிறார் நெல்சன் திலீப்குமார்.

‘ஜெயிலர்’ படத்தில் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இதன் படப்பிடிப்பை படக்குழு அண்மையில் முழுமையாக நிறைவு செய்தது. ‘ஜெயிலர்’ படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Ajith: அஜித்தின் இந்த உயரத்திற்கு காரணம்.. மேடையில் கண் கலங்கிய பிரபல இயக்குனர்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.