இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Superstar Rajinikanth: ஜெயிலர் படத்தில் ஏன் இத்தனை பிரபல நடிகர்கள் நடிக்கிறார்கள் என ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.
ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பபர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. ஜெயிலரில் ஏன் மோகன்லால், சிவராஜ்குமார் நடித்திருக்கிறார்கள் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே ரஜினிகாந்த் தானாம்.சமுத்திரக்கனிஅடுத்து பவன்கல்யாண் படத்துடன் சந்திக்கிறேன்விக்ரம்ஜெயிலரை சோலோ ஹீரோ படமாக எடுக்க நினைத்தாராம் நெல்சல் திலீப்குமார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் பல பிரபலங்கள் நடித்ததை பார்த்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் புது ஐடியா கிடைத்ததாம். இதையடுத்தே விக்ரமை போன்று ஜெயலிரிலும் பிற பிரபல நடிகர்களையும் நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தார்கள் என ஜெயிலர் படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார்.
மோகன்லால்விக்ரம் படத்தை பார்த்த பிறகே ஜெயிலரில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலையும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரையும் நடிக்க வைத்தார்களாம். கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் ரஜினிக்கு பெரிய பெயர் இருந்தாலும் மோகன்லாலும், சிவராஜ்குமாரும் நடித்தால் ஜெயிலரின் வியாபாரம் பெரிய லெவலில் நடக்கும் என நினைத்து அவர்களை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைத்திருக்கிறார்களாம்.
ரஜினிதற்போது இருக்கும் சினிமா ரசிகர்கள் ஒரு படத்தில் பல ஸ்டார்களை பார்க்க விரும்புகிறார்கள் என ரஜினிகாந்த் நினைக்கிறாராம். இதனாலேயே தன் படங்களில் பிற ஸ்டார்களை நடிக்க வைக்குமாறு இயக்குநர்களிடம் கூறி வருகிறாராம். அவ்வாறு செய்தால் ரசிகர்களை திருப்திபடுத்தலாம், படம் நன்றாக ஓடும் என்பது ரஜினிகாந்தின் கணக்காம்.
மும்பைஜெயிலர் படத்தின் எந்த காட்சிகளும் கசிந்துவிடக் கூடாது என்பதில் படக்குழு கவனமாக இருக்கிறதாம். அதனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளை சென்னையில் அல்ல மும்பையில் நடத்தி வருகிறார்கள். விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை கொடுத்த கையோடு ஜெயிலரை இயக்கியிருக்கிறார் நெல்சன். பீஸ்ட் படத்திற்கு மோசமான விமர்சனம் வந்தது. அதனால் ஜெயிலரில் தான் யார் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நெல்சன் திலீப்குமார்.
கர்நாடகாஜெயிலர் படத்தின் கர்நாடக விநியோகஸ்தரான ஏ.வி. மீடியாவை சேர்ந்த வெங்கடேஷ் கூறியதாவது, ஜெயிலரில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகிபாபு, ஜாக்கி ஷ்ராஃப், வசந்த் ரவி, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அதனால் படத்தை வாங்கும் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். ஜெயிலர் வரும்போது சிரஞ்சீவியின் போலா ஷங்கரை தவிர வேறு எந்த பெரிய படமும் ரிலீஸாகவில்லை. அதனால் போட்டி இல்லை என்றார்.
Priya Bhavani Shankar: சினிமாவில் மட்டுமா, எல்லா துறையிலும் பெண்களுக்கு அந்த கொடுமை நடக்குது: ப்ரியா பவானிசங்கர்
படங்கள்ஜெயலிர் படத்தின் கேரளா தியேட்டர் உரிமம் ரூ. 9 கோடிக்கு சென்றிருக்கிறது. ஆனால் கர்நாடக தியேட்டர் உரிமை டபுள் டிஜிட்டில் சென்றிருக்கிறதாம். ஜெயலிரை அடுத்து தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அதில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார். இதையடுத்து ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்.
Rajinikanth: மிரள வைத்த ரஜினி: ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்கும் தலைவர் ரசிகர்கள்