Sakshi Agarwal: இடுப்புச் சங்கிலி.. ரம்யா பாண்டியனை ஓவர் டேக் செய்த பிக் பாஸ் பிரபலம்.. வேறலெவல்!

சென்னை: இடையழகை சங்கிலியால் இறுக கட்டியபடி ஹாட்போஸ் கொடுத்த போட்டோக்களை நடிகை சாக்‌ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் சாக்‌ஷி அகர்வால்.

பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட சாக்‌ஷி அகர்வால் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களையும் வொர்க்கவுட் செய்யும் கவர்ச்சியான வீடியோக்களையும் வெளியிட்டு தனக்கான ரசிகர்களை சோஷியல் மீடியாவில் அதிகரித்துள்ளார்.

சினிமாவில் சாக்‌ஷி அகர்வால்: ராஜா ராணி, யூகன், திருட்டு விசிடி, காலா, விஸ்வாசம், டெடி, குட்டி ஸ்டோரி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3, நான் கடவுள் இல்லை மற்றும் பஹீரா என பல படங்களில் நடித்துள்ளார் சாக்‌ஷி அகர்வால்.

சின்ன ரோல் முதல் வில்லியாகவும் ஹீரோயினாகவும் நடித்து சினிமாவில் படிப்படியாக முன்னேறி வருகிறார் சாக்‌ஷி அகர்வால்.

இன்ஸ்டாகிராமில் கிளாமர் விருந்து: ஃபிட்னஸில் அதிக ஆர்வம் கொண்ட சாக்‌ஷி அகர்வால் கடும் வொர்க்கவுட் செய்து தனது இடையழகை கச்சிதமாக வைத்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி விருந்து அளித்து வருகிறார்.

சாக்‌ஷி அகர்வாலின் கொள்ளை அழகை பார்த்து திக்குமுக்காடிப்போன ரசிகர்கள் அவரது போட்டோக்களுக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

இடுப்புச் சங்கிலி: மொட்டை மாடியில் ரம்யா பாண்டியன் நடத்திய இடுப்புச் சங்கிலி போட்டோஷூட் ஓவர் நைட்டில் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. அதன் பின்னர் பல நடிகைகள் இடுப்பு சங்கிலியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பிக் பாஸ் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால் தற்போது வெளியிட்டுள்ள ஹாட் இடுப்பு சங்கிலி போட்டோக்கள் வேறலெவலில் ரசிகர்களை ஈர்க்கும் ஆயுதமாக மாறி உள்ளன. மேலும், தாராளமாக முன்னழகை எடுப்பாக காட்டியபடி சாக்‌ஷி அகர்வால் நடத்தியுள்ள செம செக்ஸியான போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளு விட வைத்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.